சிங்கப்பூரில் தேசிய சேவை கடமைகளை நிறைவேற்ற தவறிய குற்றத்திற்காக அமெரிக்கா குடிமகனுக்கு 9 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Garrett Alexander Gan Kok Leng (40) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர்.அவரது தந்தை சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.எனவே அவர் வம்சவாளியில் அடிப்படையில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முறையான அனுமதியின்றி சிங்கப்பூரில் இருந்து வெளியில் இருப்பது உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய சேவைப் பயிற்சிக்காக கான் பதிவு செய்தார்.
2003-ஆம் ஆண்டு பயிற்சியை மேற்கொள்ள உடல் தகுதி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கானுக்கு 2002-ஆம் ஆண்டு 18 வயது தொடங்கியதும் தேசிய சேவைக்கான அறிவிப்பு சிங்கப்பூரில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் செல்லவில்லை. அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.மீண்டும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது முறையான அனுமதியின்றி 2003-ஆம் ஆண்டு கான் சிங்கப்பூரை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு வெளியே இருந்தார்.சாங்கி விமான நிலையத்தில் இவ்வாண்டு ஜனவரி 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஆண் குடிமக்களும், நிரந்தரவாசிகளும் தேசிய சேவை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். இதை தற்காப்பு தற்காப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதை மீறுவோருக்கு உயர்நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.