தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சியாங் மாயில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.இந்த வெள்ளத்தால் 2 யானைகள் உயிரிழந்துள்ளன.
இந்த தகவலை யானைகளின் சரணாலயம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த யானைகளில் ஒரு யானைக்கு வயது 16.மற்றொரு யானைக்கு 40 வயது. இந்த யானைக்கு கண் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Elephant Nature Park இலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டதாக பூங்கா ஊழியர் ஒருவர் AFP செய்தியிடம் கூறினார்.
அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கிருந்த பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளும் மூடப்பட்டன.ரயில் நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மூடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் யாகி புயல் வீசியது.இதனால் தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.தற்போது வரை வெள்ளத்தால் 20 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.