இந்த ஆண்டு பிற்பகுதியில் பெண்களுக்கான புதிய ஆதரவு நிலையம் ஒன்று Eunos அமையவிருக்கிறது.
சிங்கப்பூர் முஸ்லீம் பெண்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சட்ட ஆலோசனை,நல்வாழ்வு நடவடிக்கைகள்,வேலை ஆதரவு முதலியவற்றை அங்கே பெண்கள் பெற முடியும்.
அது பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேற உதவும் ஓர் பாதுகாப்பான இடமாக திகழும்.
புதிய நிலையம் பற்றி அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றதில் தெரிவிக்கப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் சிறிய சந்தை நடைபெற்றது.
பெண்கள் ஏற்று நடத்தும் சிறிய வர்த்தகங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் சிறிய சந்தை நடத்தப்பட்டது.
அதில் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதாவது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கலந்துரையாடலாகும்.
அதில் தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா பேசினார்.
குடும்பத்தில் ஆண் – பெண் பொறுப்புகள் குறித்த மனப்போக்கிலும் மாற்றம் அவசியம்.
பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் எதார்த்தமாக எதிர்நோக்கும் சாவல்களைச் சமாளிப்பது அவர்கள் தங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த உதவும் என்று கூறினார்.