ரஷ்யாவில் புதுமையான தற்காலிக ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.உலகப் பாரம்பரியச் சின்னமாக அதன் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டு, புதுமையான முறையில் பார்வையாளர்களுக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் கிரோன்ஷ்டாட் அரண்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தை கடல்வழி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க உதவியது.
இப்போது அவை பிரபலமான சுற்றுலா தலங்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு கோடையிலும் சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.
இருப்பினும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட கிரோன்ஷ்டாட் அரண்களில் ஹோட்டல்கள் அமைப்பது தடை செய்துள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சுற்றுலா பயணிகள் சாப்பிட,ஓய்வெடுக்க, தூங்குவதற்கு ஏற்ற வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.பேருந்துகள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒரு இரவுக்கு USD 20 முதல் USD 50 வரை கட்டணங்கள் வரை வசூலிக்கப்படும்.அவற்றில் இருந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டைகளை கண்டு ரசிக்கலாம்.
Follow us on : click here ⬇️
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg