அரசாங்க நிதி நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பெறவிருக்கிறது.அந்த நிதி துல்லிதப் பொறியியல் வேலைத் திறன் ஒருங்கிணைப்பாளருக்கான முன்னோடித் திட்டத்தில் சேரும்போது தொழிற்கல்லூரிக்கு வழங்கப்படும்.
எத்தனை முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உருவாக்கப்படுகின்றனர்,எத்தனை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்படும் என கல்வி அமைச்சகம் கூறியது.
ஒரு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் 35 ஆண்டுகளாகும் கடுமையான மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
160 ஊழியர்கள் நிறுவனம் செயல்பட தேவை. அதில் தற்போது 120 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இதனைச் சமாளிக்க முதிர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு செய்வதில் சவால் உள்ளது. முதிர்ந்த ஊழியர்களிடம் மின்னிலக்க விளம்பரம், பேரம் பேசுவது, உரையாடல் உள்ளிட்ட திறன்கள் அவ்வளவாக இல்லை.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது.
வேலைக்கு ஏற்ப அவர்களை தயார்படுத்துவது, அவர்களுடைய திறன்களை வளர்த்து விடுவது போன்றவைகள் தொழிற்கல்லூரியின் நோக்கங்களில் சிலவற்றையாகும்.