கூடுதல் நிதிச் சொத்துகளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் : ஆய்வில் வெளிவந்த தகவல்!!
ஒரு சர்வதேச அறிக்கையின் படி சிங்கப்பூரர்கள் மற்ற நாடுகளை விட பணம், பங்குகள் மற்றும் வங்கி கணக்கில் நிதி இருப்புகள் போன்ற நிதிச் சொத்துகளை அதிகமாக கொண்டுள்ளனர்.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள அலையன்ஸ் நிறுவனம் அனைத்துலக ஆய்வு குழு அமைத்து ஆய்வு நடத்தியது.
சிங்கப்பூரர்கள் நிதிச் சொத்துகளை அதிகமாக வைத்திருப்பதற்கு காரணமாக சிங்கப்பூரின் மத்திய சேமநிதியை தெரிவித்தது.
அண்மையில் அலையன்ஸ் அனைத்துலக செல்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூர் 2023-ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் வந்தது. தனிநபர் நிகர நிதிச் சொத்துக்கள் 171930 யூரோ($246000)
முதல் இடத்தை அமெரிக்கா பிடித்திருந்தது. தனிநபர் நிகர நிதிச் சொத்துக்கள் 260320 யூரோ.
சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும், டென்மார்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
ஆசியாவில் முதலிடத்தைப் பிடித்த சிங்கப்பூருக்கு பிறகு தைவான் மற்றும் ஜப்பான் உலக அளவில் ஐந்தாவது மற்றும் 12-வது இடத்திலும் வந்தன.
சுமார் 60 இடங்களில் உள்ள குடும்பங்களின் சொத்து மற்றும் கடன் நிலைமையை ஆய்வு செய்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் மொத்த நிதிச் சொத்துக்கள் 2023-ஆம் ஆண்டில் தனியார் குடும்பங்களின் வருமானம் அதிகரித்ததால் 5.8 சதவீதம் உயர்ந்தது.
இது 2022-ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.
Follow us on : click here