எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 76 வயது சிங்கப்பூரரின் உடல் மீட்பு…!!

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 76 வயது சிங்கப்பூரரின் உடல் மீட்பு...!!

சிங்கப்பூர்:எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே மலை ஏறிய சிங்கப்பூரர் ஹாரி டானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

76 வயதான இவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த வியாழன் அன்று (செப்டம்பர் 26) திரு டான் Kongma lang pass ஹைகிங் பாதைக்கு அருகில் காணாமல் போனார்.

அவரைத் தேடிய 2 பேர் அவரது உடல் கிடைத்ததை நேற்று உறுதி செய்தனர்.

இந்த தகவலை திரு.டானின் குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக இருவரும் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் திரு.டானின் முன்னாள் மாணவர்.

திரு.டான் பல முன்னாள் மாணவர்களிடம் நெருக்கமாக பழகினார் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அவரின் இறப்பிற்கு மாணவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.