நன்கொடை திரட்டும் பணியில் இறங்கிய சிண்டாவின் Project give திட்டம்..!!

நன்கொடை திரட்டும் பணியில் இறங்கிய சிண்டாவின் Project give திட்டம்..!!

சிங்கப்பூர்:சிண்டாவின் Project Give திட்டம் நேற்று (அக்டோபர் 4) தொடங்கியது.

இத்திட்டத்தின்படி ஒரு மாத காலம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

இத்திட்டத்தை லிட்டில் இந்தியாவில் சிண்டா அமைப்பின் தலைவர் இந்திராணி ராஜா தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு புதிதாக,சிண்டா அலுவலகத்திலிருந்து 23 கார்கள் லிட்டில் இந்தியாவிற்கு வந்துள்ளன.

இதில் சிண்டா திட்டங்களின் மூலம் பயன் பெற்ற 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் இருந்தனர்.

Project Give திட்டம் 2023 முதல் சுற்றுப்புறங்களுக்குச் சென்று வருகிறது. கடந்த ஆண்டு இத்திட்டம் 4 சுற்றுவட்டாரங்களில் நடத்தப்பட்டது.

இந்த முறை Project Give திட்டம் மேலும் 8 அமைப்புகளின் ஆதரவுடன் சுற்றுப்புறங்களில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Give திட்டம் குடும்பங்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது.

சிண்டா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அன்பரசு ராஜேந்திரன் கூறியதாவது.

ஏழை எளியவர்களுக்கும் கொடுத்து தீபாவளி ஒரு குடும்பமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 23ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அவர்கள் தனிப்பட்டவர்கள் இல்லை சிங்கப்பூர் இந்திய சமூகம் அவர்களுடன் இருப்பதாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

திட்டங்களை செயல்படுத்தி,இந்த தீபாவளி அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறுவது உறுதி என்றார் அன்பரசு.

இந்த ஆண்டு மொத்தம் 84 நிறுவனங்கள் சிண்டா திட்டத்தின் மூலம் Project Give நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

சிண்டா 1991 இல் தொடங்கப்பட்டது.

மேலும் இது Project Give திட்டமாக 2001 இல் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் வருமானத்தில் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்கள் பயன் பெற்றனர்.