தாய்லாந்தில் பன்னாட்டு பயிற்சியை சிங்கப்பூர் ஆயுதப் படை நிறைவு செய்துள்ளது!

தாய்லாந்தில் பன்னாட்டு பயிற்சியை சிங்கப்பூர் ஆயுதப்படை நிறைவு செய்தது.இதில் சீனா,இந்தியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் 29 நாடுகள் பங்கேற்றது.

Cobra Gold எனும் பயிற்சி நடத்தப்பட்டது. இதனை அரச தாய்லாந்து ஆயுதப் படையும், அமெரிக்காவின் இந்தோ -பசிபிக் தளபத்தியமும் கூட்டாக இணைந்து நடத்தியது.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் நடைபெறும் மிகப்பெரிய பன்னாட்டு பயிற்சிகளில் இதுவும் ஒன்று.

இந்த ஆண்டு பயிற்சியில் வழக்கத்துக்கு மாறான மிரட்டல்களையும், வழக்கமான மிரட்டல்களையும் எதிர்கொள்வதில் கவனம் செலுத்தியது.

பேரிடர் நிவாரணம், மனிதாபிமான உதவி போன்றவற்றிலும் குழுக்கள் ஈடுபட்டது என்று தற்காப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிங்கப்பூர் ஆயுதப்படைக்குழு பன்னாட்டு தலைமையகத்தில் பங்காற்றியது. அதைப்போல் மற்ற பல வழிகளிலும் பங்காற்றியது.