சிங்கப்பூர் வருவது பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது.
சிங்கப்பூர் வருவதற்காக விசா வந்தும் ஏர்போர்ட் வரை வந்தும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
அதற்கு முக்கியமான தேவையான டாக்குமெண்ட்களைச் சரியாக எடுத்து வராமல் இருப்பது தான்.
தயவு செய்து அனைவரும் சரியான டாக்குமெண்ட்டை எடுத்து வரவும். சிங்கப்பூர் வருவதற்கு கொரோனா கட்டுப்படுதல் அனைத்தும் தளர்த்த பட்டாலும் SG Arrival Card மிக முக்கியமாக உள்ளது.
பெரும்பாலானோர் அனைத்து டாக்குமெண்ட்களை எடுத்து கொண்டு வந்தாலும் SG Arrival card யை எடுத்துக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
ஆனால், SG Arrival Card யை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அதற்கு நீங்களே அப்ளை செய்யலாம்.
சரியாக எடுத்துக் கொண்டாலும் எஸ் சி ஆர் அவர்கள் கடை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள் அதனால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
அதற்கு ICA Website க்குள் போக வேண்டும்.உங்களுடைய Flight Number, Passport Number, பெயர், நீங்கள் எந்த விசா மூலம் வர உள்ளீர்கள் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அனைத்தையும் பூர்த்தி செய்தபின் உங்களுக்கு SG Arrival Card கிடைத்துவிடும்.
SG Arrival Card இல்லையென்று திருப்பி அனுப்பினால்,நீங்கள் ஏர்போர்டிலிருந்து வெளியே வந்து உடனடியாக ICA Website மூலம் அதற்கு விண்ணப்பித்து பூர்த்தி செய்தபின் கொடுத்துவிட்டு சிங்கப்பூர் வந்து விடலாம்.
மற்ற டாக்குமெண்ட்கள் இல்லை என்றால் மட்டுமே உதாரணத்திற்கு பாண்டு பேப்பர். இது போன்ற டாக்குமெண்ட்கள் நீங்கள் எடுத்து வராமல் இருந்தால் உங்களால் அன்று வர முடியாது.
அதனால் எந்தெந்த விசாவிற்கு எந்தெந்த டாக்குமெண்ட்கள் தேவை என்று KING ARUN Youtube சேனலில் மாதம் மாதம் வீடியோ போட்டுக் கொண்டுள்ளார்.
அதைப் பார்த்துவிட்டு நல்லபடியாக சிங்கப்பூர் வந்து சேரவும்.
அனைத்து டாக்குமெண்ட்களையும் மொபைலில் வைத்து கொள்ளாமல். கண்டிப்பாக அனைத்தையும் Printout எடுத்து கையில் வைத்துக் கொள்ளவும்.