சிங்கப்பூரில் பக்கவாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவு...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள லேசான பக்கவாத நோயாளிகள் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கு கூடுதல் உதவியைப் பெற உள்ளனர்.
தேசிய நரம்பியல் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தால் சுமார் 2,000 நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தெமாசெக் அறக்கட்டளை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 1.4 மில்லியன் வெள்ளி நிதியை ஒதுக்க உள்ளது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகுதான் உண்மையான சவால் தொடங்குவதாக காதாரத்துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் டான் டோக் செங் மருத்துவமனையில் இந்த புதிய திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பக்கவாத நோயின் தாக்கத்தில் சுமார் 60
சதவீதமானவர்கள் நீண்ட காலமாக நடக்கவும், பேசவும், சாப்பிடவும், சிந்திக்கவும் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்தில் பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பயிற்சியும் அடங்கும்.
பக்கவாத நோயிலிருந்து மீண்டு நம்பிக்கையை வளர்க்க அவர்களுக்கு நான்கு தொகுதிகள் அடங்கிய பாடத்திட்ட தொகுப்பு வழங்கப்படும்.
இந்த மாதிரியான உதவி அவர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதோடு சமூகத்தில் இயல்பாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here