சிங்கப்பூரில் Hari Raya Mega Sale சந்தையில் கடைகளை நடத்தியவர்களில் சிலர் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டது.
இதனை நேற்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
கடைகளை நடத்தியவர்களில் சிலர் பதிவு செய்யாமல் வேலைச் செய்துள்ளனர். இதனை கண்டறிந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிகழ்ச்சியை Megaxpress International ஏற்பாடு செய்தது.அந்த கடைகள் பொதுமக்கள் நலனைக் கருதி மூடப்பட்டதாக கூறியது.
தற்காலிகமாக நடத்தப்படும் சந்தையில் கடைகள் வைத்து இருப்போர் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
உரிமைத்தைப் பெற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம். சுமார் 2000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.