டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வொல்பாக்கியா திட்டம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வொல்பாக்கியா திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரின் சில பகுதிகளில் ஆண் கொசுக்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.
வொல்பாக்கியா எனும் கிருமியால் பாதிக்கப்பட்ட ஆண் ஏடிஸ் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணையும் போது உருவாகும் முட்டைகள் கருவுறுவதில்லை.
ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காததால்,அவை நோய்களை பரப்புவதில்லை.
வொல்பாக்கியா திட்டம் சிங்கப்பூரின் சில பகுதிகளில் நல்ல பலனைத் தந்துள்ளது.
இதனால் அது மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இதனால் வரும் 21ம் தேதி முதல், ஹவ்காங், சிராங்கூன் சென்ட்ரல், சிராங்கூன் வடக்கு, ஜூரோங் ஈஸ்ட் மற்றும் ஜூரோங் வெஸ்ட் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது டெங்கு பரவும் அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த காலாண்டில் சிராங்கூன் மற்றும் ஹவ்காங்கில் கொசுக்கள் வெளியாகும்.
அடுத்த ஆண்டு 2025 முதல் காலாண்டில் ஜூரோங் ஈஸ்ட் மற்றும் ஜூரோங் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சியினால் நோய் பரவும் அபாயம் குறைவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here