சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் 51 வயதுடைய நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த நம்தேவ் ரத்தோட் தனது முதலாளியால் ஒட்டகம் மேய்க்கும் பணிக்கு தள்ளப்பட்டார்.
தன்னுடைய அவலநிலையை நம்தேவ் ரத்தோட் தனது மனைவிக்கு செலஃபீ வீடியோ மூலம் விவரித்துள்ளார்.
மேலும் தாய்நாட்டிற்கு வர உதவி செய்யுமாறு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தார்.
வேலைக்கு சேர்க்கும் போது குவைத்தில் வீட்டு பராமரிப்பு வேலை என்று கூறியதாகவும்,ஆனால் அதற்கு மாறாக தனது முதலாளி கடும் வெப்பம் கொண்ட பாலைவனத்தில் ஒட்டகம் மெய்ப்பதற்கான வேலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டதாக கூறினார்.
தனது கணவரை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பதற்காக அவரது மனைவி ஹைதெராபாத், வெளிவிவகார அமைச்சகத்தின் POE யை நாடினார்.
குவைத் மற்றும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அக்டோபர் 1-ஆம் தேதி நம்தேவ் நாடு திரும்பினார்.
தன்னை பாதுகாப்பாக வீடு திரும்ப உதவியதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, குவைத் மற்றும் ரியாத்தில் உள்ள இந்தியா தூதரரக அதிகாரிகள்,தெலுங்கு சங்கம் மற்றும் பீம் ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.