தாய்லாந்தின் பேங்காக்கில் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த துயரச் சம்பவத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(அக்டோபர் 1) நடந்தது.
உத்தாய் தானி மாநிலத்தில் உள்ள Wat Khao Phraya பள்ளி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து அது.பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அவர் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்தது.
தீ வேகமாக பரவியதால் பலரால் பேருந்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி உயிரிழப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை,பேருந்து நிறுத்த தவறியது மற்றும் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதே பள்ளி பயணத்தை மேற்கொண்டிருந்த மற்றொரு பேருந்தில் இருந்த தீயை அணைக்கும் கருவையை எடுத்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை என்றும் ஓட்டுநர் கூறினார்.அதன்பின் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறினார்.