விடா முயற்சி!! ஒரு வழியாக கிடைத்தது அதிர்ஷ்டம்!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் அதிர்ஷ்டக் குலுக்கலில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதி எண்களைக் கொண்டு சீட்டை வாங்கி வந்துள்ளார்.

அவர் அவ்வாறு 7 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். ஒரு வழியாக அவரது முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது….

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பரிசு கிடைத்துள்ளது.Double Colour Ball அதிர்ஷ்டக் குலுக்கல் கடந்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற்றது.

அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை விற்றதன் மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

அவருக்கு முதல் பரிசாக 24 மில்லியன் யுவான் கிடைத்துள்ளது.அவர் வாங்கிய சீட்டின் விலை 10 யுவான்.தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை செப்டம்பர் 12-ஆம் தேதி ஹூவாங் பெறச் சென்றார்.

பரிசுத்தொகையை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு சிறந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.