கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய சேமநிதியில் முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரணக் கணக்கு நிகரத்தொகை சுமார் 2 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.
கணக்கு பதிவு செய்யப்பட்டது முதல் இதுவே அதிக அளவு.நிதி நிறுவனங்களின் உயரும் வட்டி விகிதங்களைப் சேமநிதி உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்தித் தங்கள் சேமிப்பிற்குக் கூடுதல் ஆதாயம் பெற விரும்புகின்றனர்.இதுவே காரணம் என்று கூறிகின்றனர்.
ஆண்டுக்கு சேமநிதி சாதாரண கணக்கு வட்டி விகிதம் 2.5 விழுக்காடாக உள்ளன.கிட்டத்தட்ட 2.7 பில்லியன் வெள்ளி 4-ஆம் காலாண்டில் மட்டும் முதலீட்டுக்கென மீட்கப்பட்டது.
சாதாரண கணக்கு நிதியைப் பயன்படுத்தி 2022-ஆம் ஆண்டின் 2-ஆம் பாதியிலிருந்து Treasury Bills எனும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் வெகுவாக அதிகரித்துள்ளது.
அதனை DBS,OCBC,UOB உள்ளிட்ட மூன்று வங்கிகள் தெரிவித்தன.
வாடிக்கையாளர்கள் சேமநிதி பணத்தைக் கொண்டு நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டுவதாக OCBC குறிப்பிட்டு கூறியது.