சிக்கலை எதிர்கொண்ட MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்!!
செப்டம்பர் 30-ஆம் தேதி பிற்பகல்
(நேற்று) முதல் MyRepublic நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இணையச் சேவைகளில் சிக்கலை எதிர்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையச் சேவையில் தடங்கலை சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் சில வாடிக்கையாளர்கள் எதிர்கொள்வது குறித்து தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியது.
மேலும் இந்த தடங்கல் குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தது.
இணையச் சேவை தடங்கல் நேற்றிரவு 7.30 மணியளவில் சரி செய்யப்படுவதாக நிறுவனம் இணையத் தளத்தில் பதிவிட்டது.
இணையச் சேவை நேற்றிரவே சரி செய்யப்படுவதாக பதிவிட்டிருந்தாலும் இன்று காலை வரை சிக்கலை எதிர்நோக்கியதாக பல வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
Follow us on : click here