சிங்கத்தை பாசமாக வளர்த்து உணவு அளித்த நபருக்கு நேர்ந்த கதி...!!!!
ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கத்தால் தாக்கப்பட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி நூலக வனவிலங்கு பூங்காவில்
35 வயதான பாபாஜி டாவ்ல் பணிபுரிந்து வருகிறார்.
பாபாஜிக்கு சிங்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் பாதுகாப்பு வேலியை திறந்து சிங்கத்திற்கு உணவளித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அவர் சிங்கத்திற்கு வழக்கம்போல் உணவளிக்கச் சென்றார்.
இந்நிலையில் அவர் உணவளித்துவிட்டு கூண்டைப் பூட்ட மறந்துவிட்டார்.
இதனால் எதிர்பாராத விதமாக திடீரென அவர் மீது பாய்ந்த சிங்கம் அவரது கழுத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியது.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள் சிங்கத்தின் தாக்குதலை நிறுத்த அதை சுட்டனர்.
சிங்கத்தின் கொடூர தாக்குதலால் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
Follow us on : click here