சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் தோ பாயோ தொழிற்சாலை வட்டாரத்தில் குளிரூட்டப்பட்ட வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர்.
அதில் கள்ள சிகரெட்டுகள் சிக்கியது.அந்த வாகனத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 6,400 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவைகளை வண்டிக்குள் உறைந்த மீன் சரக்குகளுக்கு இடையே மறைத்து வைத்து இருந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.சுமார் 628,480 வெள்ளி தீர்வு சிகரெட்டுகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.கிட்டத்தட்ட 56,570 வெள்ளி இவற்றுக்கான பொருள் சேவை வரி என்று மதிப்பிடப்படுகிறது.
வாகனமும், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து விசாரணைத் தொடர்வதாகவும் தெரிவித்தது.