மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்…!!! எச்சரிக்கும் காவல்துறை…!!

மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்...!!! எச்சரிக்கும் காவல்துறை...!!

சிங்கப்பூர்: மோசடி சம்பவங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் அப்பாவி மக்கள் சிலர் போலி விளம்பரங்களை உண்மையென  நம்பி பணத்தை இழக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீப காலத்தில் புதிய மோசடி செயல்கள் அரங்கேறி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மாதம் செப்டம்பரில் மட்டும் காவல்துறைக்கு இது தொடர்பாக குறைந்தது 173 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தது.

மோசடி நபர்கள் பொதுமக்களிடம் 160,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக்டோக் போன்றவற்றில் வரும் விளம்பரங்களை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்கள் மற்றும் OTP போன்றவற்றை பகிர்ந்து ஏமாந்தது தெரியவந்துள்ளது.

அந்த விளம்பரங்கள் பொதுமக்களை ஒரு சிறிய கணக்கெடுப்பில் பங்கேற்கச் சொல்கிறது.

பிறகு இறுதியில் குறிப்பிட்ட பொருளுக்கு பணம் செலுத்துமாறு கேட்கிறது.

பணம் செலுத்தியும் பொருள் வரவில்லை என்பதை அறிந்த பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்து கொள்வதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற மோசடி சம்பவங்களில் மக்கள் சிக்காமல் இருப்பதற்காக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அது குறித்து தெரிவிக்கும் படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.