பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!!

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பருவ மழையின் கனமழை தாக்கத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.

கரைக்கு அருகில் இருக்கும் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

கடந்த வாரம் மதப் பண்டிகையின் போது ஆற்றில் மூழ்கி 46 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆறு, குளங்களில் குளித்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பீகார் அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

வரும் நாட்களில் மேலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.