SOS சேவையை அணுகியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் எனும் SOS யின் Caretext Whatsapp சேவை மூலம் உதவி கேட்போர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.2020-ஆம் ஆண்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சங்கத்திடம் உதவி கேட்டோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.சுமார் 11,000 பேர் 2020-ஆம் ஆண்டு சங்கத்தின் சேவைகளை நாடியுள்ளனர்.

கிட்டத்தட்ட 11,000 பேர் கடந்த 2022-ஆம் ஆண்டு whatsapp செயலியைப் பயன்படுத்தி உள்ளனர்.அதனுடன் இதரச் சேவைகளையும் சேர்த்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் சங்கத்தின் சேவையைத் தொடர்புக் கொண்டோர் எண்ணிக்கை 27,000 க்கும் அதிகம்.சென்ற செப்டம்பர் மாதம் நிலவரப்படி சங்கத்தின் சேவையை நாடியோர்களில் 82 விழுக்காட்டினர் 29 வயதும் அதற்கும் குறைவான வயதுடையவர்கள்.

உதவி கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் சங்கம் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்கா உயர்த்தியுள்ளது.அதோடு சங்கம் தொண்டுழியர்களின் அழைப்பையும் முன்பைவிட அதிகமுறை அழைப்பு விடுத்துள்ளது.இதில் தகுதி பெறுவோர் 6 முதல் 9 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும்.சங்கம் “Light in the Dark´´ திட்டத்தையும் நடத்துகிறது.இத்திட்டம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வோர்களைக் காப்பாற்ற அறிமுகம் செய்யப்பட்டது.