பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் Porsche கார் அந்தரத்தில் தொங்கியதாக New York post செய்தி நிறுவனம் கூறியது.
இந்த சம்பவம் பெண் ஓட்டுநரின் கவனக் குறைவினால் நடந்துள்ளது.அந்தப் பெண் பதட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு விசையை அழுத்தியதால் முன் புறமுள்ள சுவரில் கார் மோதியதில் சுவர் இடிந்து கார் அருகில் இருந்த மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது.
காரில் சிக்கிக்கொண்ட பெண்ணை கயிறு பயன்படுத்தி 30 நிமிடங்களில் குழுவினர் மீட்டனர்.
அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை மீட்டு பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்பட்டது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow us on : click here