சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் நடத்தப்பட்ட சோதனையில் 41 பயணிகள் பிடிபட்டனர்…!!!

சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் நடத்தப்பட்ட சோதனையில் 41 பயணிகள் பிடிபட்டனர்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இணைந்து நடத்திய சோதனையில் மொத்தம் 41 பயணிகள் பிடிபட்டனர்.

சிங்கப்பூர் குரூஸ் டெர்மினலில் இந்தச் சோதனையானது நடந்தது.

இம்மாதம் செப்டம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை 5 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

வரி செலுத்தப்படாத சிகரெட் தொடர்பான 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான 5 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மொத்தம் 743.35 வெள்ளி வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

அந்த சம்பவங்களில் சிக்கியவர்களுக்கு மொத்தம் 12,105 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோவை சுங்கத்துறை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வீடியோவில் 3 சம்பவங்கள் உதாரணங்களாக காட்டப்பட்டுள்ளன.

அதில் முதலாவதாக விலையுயர்ந்த கற்கள் பதித்த மோதிரங்களை வியாபாரம் செய்ய கொண்டு வந்த நபர் பொருளின் மதிப்பைக் குறைத்துக் காட்டியது தொடர்பாக உள்ளது.

இரண்டாவதாக சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்காக தங்க நகைகளை கொண்டு வந்த பெண் தொடர்பானது.

மூன்றாவதாக சிங்கப்பூரில் விற்பதற்காக ஆடைகளை கொண்டு வந்த பெண் ஆடைகளின் மதிப்பைக் குறைத்துச் சொன்னது தொடர்பாக உள்ளது.