SAF முழு நேர தேசிய சேவையாளரின் மரணம் குறித்து விசாரணை…!!!

SAF முழு நேர தேசிய சேவையாளரின் மரணம் குறித்து விசாரணை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் இறந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகமும் சிங்கப்பூர் காவல்துறையும் தெரிவித்துள்ளன.

பாசிர் லாபா முகாமில் அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்றிரவு (செப்டம்பர் 27) அவர் தனது படுக்கையில் மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை தற்காப்பு அமைச்சகம் நள்ளிரவுக்கு பின் வெளியிட்ட கூட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவ வாகனம் அவரை இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

ஆம்புலன்ஸில் உயிர்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மருத்துவமனையில் இறந்தார்.

அவரது வயது குறிப்பிடப்படவில்லை.

அவரது மரணம் பயிற்சி தொடர்பானது அல்ல என்று பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.