மோசடிகளை தடுக்க வந்தாச்சு...!!!24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்...!!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மக்கள் எதிர்கொள்ளும் மோசடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர தொலைபேசி எண்ணை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசி எண்ணை மக்கள் எளிதில் நிறைவு வைத்துக் கொள்ளும்படி அது நான்கு இலக்க எண்ணாக மாற்றியுள்ளது.
அரசாங்கம் அறிமுகப்படுத்திய அந்த அவசர தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ScamShield Suite எனப்படும் மோசடி எதிர்ப்பு தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
பொதுமக்களை மோசடியில் இருந்து பாதுகாப்பதே இதன் குறிக்கோள்.
தற்போதுள்ள ஸ்கேம்ஷீல்டு செயலியுடன், புதிய இணையதளம், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்பாடுகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
தேசிய குற்றத்தடுப்பு கவுன்சில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவசர தொலைபேசி சேவையை வழங்கியது.
தற்போது அது 24 மணி நேரமும் வேலை செய்யும்.
அதன் பெயர் ScamShield ஹாட்லைன் என மாற்றமடைந்துள்ளது.
தற்போதுள்ள தொலைபேசி எண் 1800-722-6688.
புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அவசர தொலைபேசி எண் 1799.
மோசடி குற்றங்கள் தொடர்பான விளக்கத்தையும் அதில் பெறலாம்.
மோசடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் DBS/POSB, UOB, OCBC உள்ளிட்ட ஏழு வங்கிகளில் தங்கள் கணக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Follow us on : click here