வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்!

சென்ற வாரம் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்து இருக்கும் ஊழியர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பது அவசியம் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது.

நிறுவனங்களும் மனிதவள அமைச்சகமும் ஏற்கனவே பல நிறுவனங்கள் மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் சேரும் ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதாக CNA விடம் கூறியது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மனிதவள அமைச்சகம் புதிய விதிமுறையைக் கொண்டுவர உள்ளது.அத்தகைய நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிமுறையின்கீழ் அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறியது.

மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் சேரும் வெளிநாட்டு ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்களைப் புதிய விதிமுறையின்கீழ் மூன்றாம் தரப்பினர் சரி பார்ப்பது அவசியம்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிலிருந்து ஊழியர்களின் கல்வி சான்றிதழ் பெறப்படவில்லையென்றால் மட்டுமே தற்போது சரி பார்க்கப்படுகிறதாக கூறியது.

அதனைச் சரிபார்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை அல்லது கல்வி அமைப்புகளைத் தொடர்பு கொண்டு சான்றிதழ்கள் உண்மையானதா? இல்லையா?என்பதை நிறுவனங்கள் உறுதி செய்வதாக தெரிவித்தது.