சிங்கப்பூர் ரயில் சேவையில் தடங்கல்!! எதனால்!!

சிங்கப்பூர் ரயில் சேவையில் தடங்கல்!! எதனால்!!

செப்டம்பர் 25 புதன்கிழமை காலையில் கிளமெண்டி நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று பழுதடைந்தது.அதன் காரணமாக தண்டவளத்திலும் அதன் சாதனங்களிலும் கடும் சேதம் ஏற்பட்டதாக பொறியியலாளர்கள் கூறினார்கள்.

இதன் பழுது பார்ப்பு பணிகள் 30க்கும் மேற்பட்ட தண்டவாள பகுதிகளை சீரமைப்பதிலும் மின் மடங்களை மாற்றுவதிலும் பெரும் கவனம் செலுத்துகின்றன.

மேலும் இவற்றின் எடை சுமார் ஒரு டன்னிற்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக MRT சேவை மூன்று நாட்களாகியும் இன்னும் சரி செய்ய இயலவில்லை.

இதனால் கிழக்கு – மேற்குத் தடத்தில் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை இருக்காது.

வரும் (செப்-30) திங்கட்கிழமைக்குள் இவற்றை சரி செய்வதற்காக SMRT அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச பேருந்து சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

SMRT நிறுவனம் இலவச பேருந்து சேவைகளை நாடும் உடற்குறையுள்ளோர்க்கு உதவி தேவைப்பட்டால் உதவுமாறு கூறினார்.

மேலும் உதவிகள் தேவைப்பட்டால் SMRT அதிகாரிகளை அணுகும்படி நிறுவனம் கூறியது.

பூன் லே- ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையங்களுக்கு இடையிலும் புவன விஸ்தா- குவீன்ஸ் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையிலும் 10 நிமிட இடைவெளியில் shuttle ரயில் சேவைகள் வழங்கப்படும்.

ஜூரோங் ஈஸ்ட் – புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையில் இணைப்பு முறையில் சேவை வழங்குவது பற்றியும் முன் பரிசீலிக்கப்பட்டது.

இதனால் மேலும் சில நாட்களுக்கு ரயில் சேவை தாமதமாகும் என்றும் அவர் கூறினார்.