இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்...!!!
இந்தோனேசியாவின் புரோமோ டெங்கர் செமரு தேசிய பூங்காவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
கிழக்கு ஜாவாவில் கஞ்சா செடிகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.
கஞ்சா செடிகள் பூங்காவில் சுமார் 1.5 ஹெக்டேர் பரப்பளவில் காணப்பட்டன.
இதில் சுமார் 38,000 கஞ்சா செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மேலும் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில், மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்வது அல்லது பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
அங்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
Follow us on : click here