மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த சிங்கப்பூர் காய்கறிகளின் விநியோகம்! உற்பத்தியை பெருக்க முயற்சி எடுக்கப்படவில்லை!

உள்ளூர் காய்கறிகளின் உற்பத்தியை தாங்கள் இன்னும் பெருக்கவில்லை என்று சிங்கப்பூர் பண்ணையாளர்கள் கூறினர். அண்மையில் மலேசியாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் காய்கறிகளின் விநியோகம் தடைப்பட்டது. தடைப்பட்ட போதும் அவர்கள் உற்பத்தியை பெருக்க முயற்சிகள் செய்யவில்லை என்றும் கூறினர்.

இறக்குமதியில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு காய்கறிகளை பயிரிடுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று கூறினர்.

அந்த அளவிற்கு உள்ளூர் விற்பனைக்கு தேவை இல்லை என்றனர். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விநியோகம் குறைந்திருப்பதாக காய்கறி வியாபாரிகள் கூறினர்.

அதாவது மூன்றில் ஒரு பகுதி குறைந்திருக்கிறது என்றனர்.

அதன் விலைகள் சுமார் 30 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்கு காய்கறிகளை இந்தோனேசியா,தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.