சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவருக்கு 12 மாத தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக 12 மாதங்கள் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில், திருவாட்டி சி என்ற பெண் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக டாக்டர் சென் யுன் ஹியன் கிறிஸ்டோபரை சந்தித்தார்.
டாக்டர் சென் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணிற்கு தையல் சரியாக போடவில்லை என்பது பின்னர் விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஒரு வருடம் கழித்து அந்தப் பெண் கருவுற்றார். பின்னர் அவருக்கு கருக்கலைப்பு நடந்தது.
இது குறித்து அந்த பெண் 2016ல் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்தார்.
84 வயதான டாக்டர் சென் தனது பணியில் அலட்சியமாக இருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விசாரணை செலவு மற்றும் வழக்கறிஞர்களின் கட்டணத்தை அவரே ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
Follow us on : click here