சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு மத்திய விரைவுச் சாலையில் உள்ள மேம்பால சாலை உடைந்து விழுந்து விபத்து நடந்தது.
இச்சம்பவம் தொடர்பாக CPG Consultants நிறுவனம் Or Kim Peow Contractors நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 44 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேம்பாலச் சாலையின் வடிவமைக்கும் பொறுப்பை CPG Consultants நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
Or Kim Peow Contractors கட்டும் குத்தகையைப் பெற்ற பிறகு அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
ஜூலை 14-ஆம் தேதி 2017-ஆம் ஆண்டு அதிகாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது.
அச்சம்பவத்தின் போது அதில் 11 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களில் 10 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
ஏற்கனவே Or Kim Peow கட்டுமான நிறுவனத்தின் திட்ட இயக்குநரும் பொறியியலாளரும் அதில் விரிசல் இருப்பது தெரிந்தும் அலட்சியமாக நடந்து கொண்டதற்காகவும், ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் தண்டனைப் பெற்றுள்ளனர்.