சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
சிங்கப்பூர் குடியுரிமை கடந்த வருடம் 23,472 பேருக்கு வழங்கப்பட்டது. 34,491 பேர் நிரந்தரவாசிகளாக தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 5.7 விழுக்காட்டினர் சிங்கப்பூரை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகள் ஆவார்.
புதிதாக குடியுரிமை பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுதோறும் 22400 ஆக உள்ளது.
மேலும் நிரந்தரவாசிகளாக தகுதி பெறுவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 32,600 ஆக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
புதிதாக குடியுரிமை அடைவோரின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 21600 ஆகவும், நிரந்தரவாசிகளாக தகுதி பெறும் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 31100 ஆக உள்ளது.
விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அவற்றின் தரத்தின் அடிப்படையில் நிரந்தரவாசி தகுதிகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here