ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி...!!!!

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தொலைதூரமான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிலர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

ஜப்பானின் நிலப்பரப்பு நான்கு பெரிய டெக்டோனிக் தகடுகளின் மேல் அமர்ந்திருப்பதால், நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது.

அவற்றில் பெரும்பாலானவை பெரிய சேதத்தை ஏற்படுத்தாது.

ஜப்பானில் மேம்பட்ட கட்டிட தொழில் நுட்பங்கள் மற்றும் அவசரகால நடைமுறைகள் போன்றவை நன்கு வரையறுக்கப்பட்ட காரணத்தால் அப்பகுதிகளில் பெரிய அளவிலான நடுக்கங்கள் ஏற்பட்டாலும் அவற்றின் பாதிப்பு குறைவாக இருக்கும்.

 

Follow us on : click here ⬇️