ஈஸ்வரன் மீதான 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பு...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான வழக்கு விசாரணை இன்று காலை 10 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.
இந்த வழக்கு நீதிபதி வின்சென்ட் ஹூங் முன் விசாரணைக்கு வந்தது.
மூத்த வழக்கறிஞர் டேவிந்தர் சிங்
திரு.ஈஸ்வரனுக்கான சட்டக் குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.
இந்நிலையில் ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர்கள் கைவிட்டனர்.
மொத்தம் 30 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
அரசாங்க ஊழியராக இருந்து வெகுமதியான பொருட்களைப் பெற்றது மற்றும் நீதியைத் தடுத்தல் ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகள் மட்டும் தொடர்கின்றன.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் 5 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க ஊழியராக இருந்து மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
நீதியைத் தடுக்கும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
திரு.ஈஸ்வரன் அரசு ஊழியராக இருந்தபோது இரண்டு தொழில் அதிபர்களிடம் பரிசு பெற்றுள்ளார்.
அவற்றின் மதிப்பு 403,297 வெள்ளி என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திரு.ஈஸ்வரன் தரப்பு வழக்கறிஞர் திரு.டேவிந்தர் சிங் அவர் மீதான குற்றங்களுக்கு எதிர்த்து வாதிட்டார்.
திரு.ஈஸ்வரன் அரசு ஊழியராக இருந்தபோது மதிப்புமிக்க பொருட்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை அல்லது மிகக் குறைந்த அளவே தீங்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனால் ஈஸ்வரனுக்கு தண்டனை விதித்தால் அதிகபட்சமாக 8 வாரங்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று டேவிந்தர் சிங் கேட்டுக் கொண்டார்.
Follow us on : click here