சீஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்படும் வீடியோ வைரல்..!!!

சீஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் தாக்கப்படும் வீடியோ வைரல்..!!!

சிங்கப்பூர்:சீஹுவா ஆரம்பப் பள்ளி மாணவர் ஒருவரை தாக்கும் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் CNA விடம் தெரிவித்தனர்.

இந்த வீடியோ சுமார் 4 நிமிடங்கள் உள்ளது.

அதில் பதின்ம வயது ஆடவர்  தொடக்கப் பள்ளி மாணவனை தாக்குவதை காணலாம்.

இது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தளங்களில் பகிரப்பட்டது.

இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை தாக்கும் ஆடவர் உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் சீருடையை அணிந்திருப்பதை காண முடிகிறது.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக CNA, சீஹுவா தொடக்கப் பள்ளியை தொடர்பு கொண்டது.