இணைய கட்டணச் சேவையை நிறுத்திய Q0010 நிறுவனம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான Qoo10 செப்டம்பர் 23 முதல் அதன் ஆன்லைன் கட்டணச் சேவையை நிறுத்தியது.
இந்தத் தகவலை நேற்று மாலை
(செப்டம்பர் 23) சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வணிகர்கள் தளத்திற்கு எதிராக புகார் அளித்தனர்.
பொருட்களை விற்ற பின் தொகை வசூலிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன.
மேலும் வர்த்தகர் சிலருக்கு பல சந்தர்ப்பங்களில் பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Qoo10 தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வணிகர்களுக்கு நிலுவைத் தொகையைத் திரும்பப் பெறவும் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கட்டணச் சேவைகள் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கட்டணச் சேவைகளையும் வழங்குவதை நிறுத்துமாறு Qoo10 க்கு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், எதிர்கால பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்பினரை நியமிக்க வேண்டும்.
Follow us on : click here