சிங்கப்பூரில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகலாம்!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் வேலையின்மை விகிதம் இரண்டு விழுக்காடாக இருந்தது. ஜனவரி மாதம் ஒட்டு மொத்த வேலையின்மை விகிதம் 1.9 விழுக்காடு.

கிருமி பரவல் காலகட்டத்தில் அதன் விழுக்காடு 2.2. இந்த விழுக்காடுடன் ஒப்பிடுகையில் நிலைமை மேம்பட்டுள்ளது.

நிரந்தரவாசிகள், குடிமக்களின் வேலையின்மை விகிதம் 2.8 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது.

குடிமக்களின் வேலையின்மை விகிதமும் மேம்பட்டிருக்கிறது.

சுமார் 64,500 பேர் ஜனவரி மாதத்தில் வேலை இல்லாமல் இருந்தனர்.இவர்களில் சுமார் 90 விழுக்காடு குடிமக்கள்.

தற்போதைக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றும் ஆனால்,ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுவதாக கூறினர்.