ஜப்பானில் தொடரும் கனமழை...!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை ...!!!
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இஷிகாவா பகுதியில் உள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்து அண்டை பகுதிகளில் பாய்ந்து வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதனால் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் “உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை” குறித்து எச்சரித்துள்ளது.
இஷிகாவா பகுதிக்கு ஆய்வகம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனால் வாஜிமா, சுஸு போன்ற நகரங்களில் வசிக்கும் சுமார் 30,000 மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow us on : click here