நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளுடன் இருக்க வேண்டும்-இந்திராணி ராஜா!

நாடாளுமன்றம் திறன்மிக்க, மதிப்பிற்குரிய அரசியல் அரங்கமாக திகழ்வது எவ்வாறு உறுதி செய்யலாம்.

இதன் தொடர்பில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் Cheng Hsing Yao நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் குமாரி இந்திராணி பேசினார்.

நாடாளுமன்றத்தில் பிளவுபடுத்தும் அரசியலைக் கொண்டிருப்பதற்கு எதிராக அவைத் தலைவர் இந்திராணி ராஜா எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியைப் பிரதிநிதித்தாலும் அவர்களின் குறிக்கோள் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.

நாடு செழிப்படையவும்,சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.இதற்கு இந்த வரவு செலவு திட்டம் உதவும் என்று கூறினார்.