நேற்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற,அதிபர் தேர்தல் தொடர்பான சட்டங்களின் மாற்றத்தை நிறைவேற்றியது.
தாதிமை இல்லத்தில் இருப்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாண்டு அதனைச் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் 20 முதல் 30 தாதிமை இல்லங்களில் இதற்கென முன்னோடி திட்டத்தைச் சோதிக்கப்படவிருக்கிறது.பொதுச் சேவைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் Chan chun sing பேசினார்.
அதன்பின் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதுக் குறித்தும் அவர் விளக்கம் தந்து பேசினார்.
சுமார் ஈராயிரம் பேர் தாதிமை இல்லங்களில் இருந்தபடியே இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். தாதிமை இல்லங்களில் 50 க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இல்லங்களில் அதற்கென சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட உள்ளது என்றும் கூறினார்.
தாதிமை இல்லங்களில் இருக்கும் படுத்த படுக்கையாக இருப்பவர்களின் வாக்குகளைச் சேகரிக்க சிறப்பு குழு அமைத்து செயல்படும் என்று கூறினார்.
சிங்கப்பூரில் தாதிமை இல்லங்களில் இருக்கும் வேகமாக மூற்படையும் சமூகத்தினர் வாக்களிக்க வசதி செய்து தரப்படும் என்று கூறினார்.
அதே போல் வெளிநாட்டில் சிங்கப்பூரர்களுக்கும் வாக்களிக்க கூடுதல் வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார்.