வாகனங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பூட்டப் படாத வாகனங்களில் இருந்த பொருட்களை திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 16 மற்றும் செப்டம்பர் 9 க்கு இடையில், தெமாசிக் புலவார்ட் பகுதியில் இருந்த சில வாகனங்களில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.
காவல்துறையினர் புகார் பெறப்பட்டதை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.
அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சில வாகனங்கள் பூட்டப்படாமல் இருந்துள்ளது.
இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திய சந்தேக நபர் வாகனங்களில் இருந்து சுமார் 100,000 ரூபாய் மதிப்புள்ள சில பொருட்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
அவற்றில் 2 சொகுசு கை கடிகாரங்களும் அடங்கும்.
இதன் அடிப்படையில் சந்தேக நபர் செப்டம்பர் 19 அன்று கைது செய்யப்பட்டார்.
அதனால் அவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.
திருட்டு குற்றத்திற்காக அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புண்டு.
Follow us on : click here