ஆன்லைன் நூதன மோசடியில் 4100 பிட்காயின்கள் திருட்டு!! சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது…!!!

ஆன்லைன் நூதன மோசடியில் 4100 பிட்காயின்கள் திருட்டு!! சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் கைது...!!!

சிங்கப்பூர்: அமெரிக்காவில் 230 மில்லியன் டாலர் மின்னணு நாணய மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மியாமி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மலோன் லாம் எனும் 20 வயதான இளைஞர், இணையத்தில் 4,100 பிட்காயின் நாணயங்களைத் திருடி கள்ளப் பணத்தைப் நல்ல பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறார்.

மோசடி செய்பவர்கள் மற்றவர்களுடைய மின்னணு நாணயக் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கணக்கில் இருந்து பல்வேறு வழிகளில் பணத்தை மாற்றி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இவருடன் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 21 வயதான ஜோண்டியல் சேரானோ மற்றும் பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

லாம் மற்றும் சேரானோ புதன்கிழமை (செப்டம்பர் 18) இரவு கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் நேற்று( செப்டம்பர் 19) தெற்கு புளோரிடா மற்றும் மத்திய கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் DC குடியிருப்பாளரிடமிருந்து நிதியை அணுகவும் சலவை செய்யவும் வெவ்வேறு வழியில் ஆன்லைன் மாற்றுப் பெயர்களை பயன்படுத்தி மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் பெறப்பட்ட தொகையை லாம் மற்றும் சேரானோ சர்வதேச பயணங்கள் சென்று கடிகாரங்கள், நகைகள், சொகுசு பைகள், கார்கள் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here ⬇️