சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு...!!!
சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.
கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.
சிறுவன் ஜப்பானிய நாட்டவர் என்றும், அவரது பெற்றோர் ஜப்பானிய மற்றும் சீன குடிமக்கள் என்று தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது மிகவும் வெறுக்கத்தக்க குற்றமாகவும், தீவிரமான மற்றும் கொடூர விஷயமாகவும் கருதுவதாக கூறினார்.
தாக்குதலின் போது குழந்தைக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய மறுநாளே சிறுவன் உயிரிழந்தான்.சிறுவனை தாக்கிய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் செயல் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைவில் விளக்கம் அளிக்குமாறு சீனாவை ஜப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
Follow us on : click here