வியட்நாம் புதிய அதிபர்!சிங்கப்பூர் தலைவர்கள் வாழ்த்து!

வியட்நாமில் புதிய அதிபராக Vo Van Thuong தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் தலைவர்கள் வியட்நாம் புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நீடித்த நிலைத்தன்மை, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினர்.

சிங்கப்பூருக்கு Thoung அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும்மாறு சிங்கப்பூர் அதிபர் Halima Yacob அழைப்பு விடுத்தார்.

இவ்வாண்டு சிங்கப்பூரும் வியட்நாமும் இரு தரப்பு அரசாதந்திர உறவை ஏற்படுத்தி கொண்டதன் 50-ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கின்றன.