“சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்”-சுன் ஷுவெலிங்
சிங்கப்பூர்: உலக நாடுகளில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது. திரைப்படங்களின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை காணலாம் ஆனால் அதே திரைப்படங்கள் குற்றச் செயல்கள் புரியவும் வழி வகுக்கின்றன.
சிங்கப்பூரில், நான்கு ஆண்டுகளில் 140 சிறுவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வீடியோக்கள் மற்றும் படங்களை போலீஸார் விசாரித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப அடிப்படையிலான பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்கள் மாறும்போது, சட்டங்களும் மாற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறார் விசாரணை குறித்த பயிலரங்கில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதில் 180 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களை ஒடுக்குவதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வலியுறுத்தினார்.
பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் மற்றும் படங்களை தயாரித்தல், விநியோகம் செய்தல் மற்றும் வைத்திருப்பதற்கு எதிரான வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கு நீதி வழங்குவதும் முக்கியம் என்று கூறினார்.
Follow us on : click here