சிங்கப்பூரில் ஊழியர்கள் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் குடும்பம் ஒன்று வித்தியாசமான முறையில் அவர்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
Siglap Yarrow Gardens பகுதியில் வசிக்கும் சியாம் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு வெளியே ஒரு தானியக்க இயந்திரத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கு வரும் ஊழியர்கள் தானியக்க இயந்திரத்திலிருந்து இலவசமாக பானம் எடுத்துக் கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு நேரடியாக பானம் கொடுக்கலாம் என்று நினைத்தனர்.ஆனால், ஊழியர்கள் ஒரு சில நேரம் வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு செல்லுகின்றனர். இதனால் அவர்களுக்கு பானங்களைக் கொடுக்க முடியவில்லை. அவர்கள் தானியக்க இயந்திரத்தை வீட்டிற்கு வெளியே வைக்கலாம் என்று முடிவெடுத்தனர். அதோடு பானங்களும் சில்லென்று இருக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பானங்களை வாங்கி வைப்பது , தானியக்க இயந்திரத்தின் தோற்றத்தை வடிவமைப்பது,Instagram பக்கத்தை நிர்வகிப்பது போன்ற பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர்.
வீட்டிற்கு வெளியே தானியக்க இயந்திரத்தை வைத்ததிலிருந்து ஊழியர்கள் பலர் அதனைப் பயன்படுத்திகிறதாக குடும்பத்தார் கூறினர்.637 பானங்கள் முதல் மாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.