சிங்கப்பூரில் மழையின் காரணமாக டாக்ஸி ஓட்டுநர் வருமானம் குறைவு!

சிங்கப்பூரில் பருவக்காலமழைக் காலத்துக்கு முன்பை விட டாக்ஸி ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளது.50 விழுக்காடு வரை குறைந்து இருக்கிறது.மழை பெய்வதில் சாலைகள் தெளிவாக தெரியவில்லை.

இதனால் வாகனத்தை மெதுவாக ஓட்ட வேண்டியதாக இருக்கிறது. மெதுவாக ஓட்டுவதால் ஒரு பயணத்தை முடிக்க அதிக நேரம் எடுக்கிறது.

கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தினமும் 6 வாடிக்கையாளர்களே கிடைக்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வானிலை நன்றாக இருக்கும் பொழுது 12 ஆக உயர்கிறது.இதற்கு காரணங்களாக சாலை பாதுகாப்பில் கவனம், வாகன நெரிசல் ஆகியவை என்கிறார்.

அடை மழை பெய்யும் சமயத்தில் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரம் கூடுகிறது. விழுந்திருக்கும் மரக்கிளைகளையும், மரங்களையும் தவிர்ப்பதற்கு போக்குவரத்து தகவல்களைக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

தியோங் பாரு ரோட்டில் வெள்ளிக்கிழமை அன்று சரிந்த மரத்தால் நடைபாதை சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் மோசமான வானிலை காரணமாக ஏற்பட சாத்தியம் இருக்கிறது.

இனி வரும் நாட்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்தாலும் வானிலை சற்று சீராகலாம் என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.