உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் புதிய உடன்பாடு!சிங்கப்பூர் வரவேற்கிறது!

2004-ஆம் ஆண்டு உலகப் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் உடன்பாடு குறித்து பேச்சு தொடங்கப்பட்டது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் இந்த புதிய உடன்பாட்டை வரவேற்கிறது.

புதிய உடன்பாடு பல தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது என்று அமைச்சகம் கூறியது.

உடன்பாடு சட்டத்தை அடிப்படையாக கொண்ட உலக ஒழுங்கைக் கட்டிகாப்பதில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தேவையை இது கோடிட்டு காட்டுவதாகவும் கூறியது.

இந்த பேச்சுவார்த்தைக்குத் வெளியுறவு அமைச்சின் சிறப்புத் தூதரும் சிங்கப்பூர் பெருங்கடல்,கடல் சட்ட விவாகரத் துறைத் தூதருமான Rena Lee தலைமை வகித்தார்.

2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் தலைமை வகுக்கிறது.

அனைவரும் இந்த புதிய உடன்பாட்டை மதித்து நடக்க வேண்டும் என்று விரும்புவதாக வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கூறினார்.